கற்றாழை நமக்கு இயற்கை தந்த மாமருந்து. இது தண்டில்லாத
நீண்ட இலைகளை கொண்ட தாவரம். இதனை நம் வீட்டிலேயே தொட்டியில் வளர்க்கலாம். இதற்கு அதிக தண்ணீர் தேவை இல்லை. கற்றாழை இலையிலிருந்து கிடைக்கும் ஜெல்லே அதிகமாக மருந்தாக பயன்படுகிறது. இதனை பயன்படுத்தி பல அழகு சாதன நிறுவனங்கள் அழகு சாதன பொருட்கள் தயாரிக்கின்றன. நாம் இதனை நம் வாழ்வில் ஒரு முக்கிய பொருளாக சேர்த்து கொண்டால் பல நன்மைகளை பெறலாம். இது தோல் பராமரிப்பு, முடி வளர்ச்சி, உடல் எடை குறைதல் என பலவற்றுக்கு பயன்படுகிறது. உடல் எடை குறைய கற்றாழை எவ்வாறு உதவுகிறது என்பதை காண்போம்.
கற்றாழை
வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கிறது. வளர்சிதை மாற்றம் என்பது உடல் கலோரிகளையும் கொழுப்பையும் வழக்கமாக எரிப்பதை காட்டிலும் மிக வேகமாக எரிக்கிறது என்பதாகும். எனவே கற்றாழை வளர்சிதை மாற்றத்தை அதிகரிப்பதால் நாள் முழுவதும் எரியும் கலோரிகளின் எண்ணிக்கையும் அதிகரிக்கும். எனவே இதன் காரணமாக உடல் எடை குறையும்.
கற்றாழை ஆன்டிஆக்ஸிடன்ட்களைக் கொண்டுள்ளது மற்றும் இது உடலை தூய்மைப்படுத்துகிறது. நம் உடல் சுத்தமாக இருக்கும்போது, உடல் எடை விரைவில் குறையும்.
கற்றாழை நம் உண்ணும் உணவை சரியாக ஜீரணிக்க உதவுகிறது. இது உடலில் இருக்கும் கழிவுகள் அனைத்தையும் வெளியேற்றுகிறது . இதனால் எடை குறைகிறது.
கற்றாழை
பல ஊட்டச்சத்துக்களை உடலுக்கு வழங்குகிறது. அதனால் பசைத்தன்மை குறைகிறது . குறைவாக சாப்பிடுவதால் எடையும் குறைகிறது. கற்றாழையை சரியான அளவில் தொடர்ந்து உணவில்
சேர்த்தால், உடல் எடையை குறைக்க முடியும்.
கற்றாழை உடலில் உள்ள சக்கரையின் அளவை குறைக்கும். அதுவும் உடல் எடை குறைய ஒரு காரணமாய் விளங்குகிறது.
இயற்கையாக
கிடைக்கும் கற்றாழை
சாறை எடுத்துக்கொள்வதால் மட்டுமே இந்த நன்மைகள் கிடைக்கும். கடைகளில் விற்கப்படும் சர்க்கரை உள்ள கற்றாழை சாறை பயன்படுத்துவதால் இந்த நன்மைகள் கிடைக்காது. அதாவது சக்கரை சேர்த்த கற்றாழை சாறை குடிப்பதால் உடலில் சக்கரை அளவு அதிகரிக்கும். அது உடல் எடையை அதிகரிக்க வழிவகுக்கும். எனவே இயற்கையாக கிடைக்கும் கற்றாழை சாறை பயன்படுத்துவதே உடல் எடையை குறைக்க உதவுகிறது.
கற்றாழை சாற்றில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளன.அவை உடலில் உள்ள தேவையற்ற நச்சுக்களை வெளியேற்றுகிறது. எனவே உடல் எடை குறைகிறது.
கற்றாழை சாறு ஒரு மலமிளக்கியாக செயல்படுகிறது. எனவே மலச்சிக்கலை சரிபடுத்துகிறது.உடலில் கழிவுகள் சேருவதை தடுக்கிறது. இதுவும் உடல் எடைகுறைய ஒரு காரணம்.
கற்றாழை சாறை காலையில் வெறும்வயிற்றில் சாப்பிடுவது நல்லது. காற்றாழையை தினவும் ஒன்று அல்லது இரண்டு துண்டுகள் எடுத்து காலையில் வெறும் வயிற்றில் சாப்பிடலாம் அல்லது கற்றாழை சாறை எடுத்து வெறும் வயிற்றில் குடிக்கலாம். இது எடை குறைக்க உதவுகிறது.
கற்றாழையுடன் எலுமிச்சை சாறு மற்றும் சிறுது தேன் கலந்து குடித்து வர நல்ல பலன் கிடைக்கும். கற்றாழை சாறை உணவுக்கு முன்பு எடுத்து கொள்வதே சிறந்தது.
கற்றாழை ஜெல் என கடையில் விற்கும் எதையும் வாங்கி உண்ண வேண்டாம். கடையில் விற்பவை தோலில் தடவ பயன்படுத்தக்கூடியது. அதில் நிறைய வேதிப்பொருட்கள் இருக்கும். அது உடலுக்கு தீங்கு விளைவிக்கும் .எனவே அதனை வாங்கி உட்கோல வேண்டாம். இயற்கையாக கிடைக்கும் கற்றாழை சாறை உட்க்கொள்வதே நன்மை பயக்கும்.
முக்கியமான வேண்டுகோள். கற்றாழையை செடியிலிருந்து எடுத்து அப்படியே உட்கொள்ள வேண்டாம். அதில் ஒரு நச்சு பொருள் உள்ளது. எனவே நன்கு கழுவிய பின் அதனை பயன்படுத்தவும். கற்றாழையில் இருக்கும் நச்சுப்பொருள் பற்றி தெரிந்து கொள்ள Click here.
0 Comments