கற்றாழை நமக்கு இயற்கை தந்த மாமருந்து.
நம் முன்னோர்கள் அதிக அளவில் இதனை பயன்படுத்திக்கொண்டு இருந்தார்கள். நாம் இந்த இயற்கை
மாமருந்தை மறந்துவிட்டோம். கடைகளில் கிடைக்கும் கெமிக்கல்களை நோக்கி சென்றுவிட்டோம்.
நம் முன்னோர்களின் முடிவளர்ச்சிக்க்கு
முக்கிய பொருளாக கற்றாழை இருந்திருக்கிறது. முடி உதிர்தல் மட்டுமல்ல கற்றாழையில் முடி
வளர்ச்சியை தூண்டும் என்சைம்கள் உள்ளன. அவை தலையில் உள்ள இறந்த செல்களை அளித்து புது
செல்களை வளர செய்கின்றன. எப்போதும் தலையை ஈரப்பதத்துடன் வைத்திருக்கின்றன.
கற்றாழை முடிக்கு சிறந்த வகையில் பயன்படுகிறது.
முடிக்கு ஒரு இயற்கையான கண்டிஷனராக பயன்படுகிறது. முடியை பிரகாசமாக வைத்துக்கொள்ள கற்றாழை
மிகவும் பயன்படுகிறது. முடியை மென்மையாக்கவும் வலிமையாக்கவும் கற்றாழை பயன்படுகிறது. தலையில்
அதிக எண்ணெய் சுரத்தல் அல்லது வறட்சியாக இருத்தல் போன்ற பிரச்சனைகளுக்கு கற்றாழை ஒரு
சிறந்த தீர்வாக இருக்கிறது. அதிக விலை கொடுத்து தேவையற்ற பயன்தராத
சிகிச்சைகளை செய்வதை விட்டுவிட்டு நாம் எளிதில் கிடைக்கும் இந்த மாமருந்தை பயன்படுத்தினால்
அதிக நன்மைகளை பெறலாம். கற்றாழை முடி உதிர்தலை தடுப்பதோடு மட்டுமல்லாமல் முடிக்கு அழகையும்
ஆரோக்கியத்தையும் தந்து முடியை பாதுகாக்கிறது.
பல அழகு சாதன நிறுவனங்கள் இதனை பயன்படுத்தி
ஷாம்பு முதலிய முடிக்கு தேவையான பொருட்களை தயாரிக்கிறார்கள். இயற்கையாக நம் அருகில்
இருக்கும் இதன் பயனை நாம் உணராமல் இருக்கிறோம். நாம் நம் வாழ்கையில் இந்த இயற்கையாக
எளிதில் கிடைக்கும் கற்றாழையை பயன்படுத்தி பயன் பெற வேண்டும்.
கற்றாழை தலையை ஈரப்பதமாக வைத்திருப்பது
மட்டுமல்லாமல் தலையில் இருக்கும் சிறு புண்களை ஆற்றவும் வறட்சியை குறைக்கவும் உதவுகிறது. இது தலைக்கு குளிர்ச்சியை
தருகிறது. தலையில் இரத்த ஓட்டத்தை சீராக்க உதவுகிறது. பொடுகு பிரச்சனைக்கு சிறந்த தீர்வாக
இருக்கிறது. தலையில் அதிகப்படியான எண்ணெயை அகற்றி தலையை ஈரப்பதத்துடன் வைத்திருக்கிறது.
ஆண்களுக்கு ஏற்படும் வழுக்கையை குறைக்க கற்றாழை பயன்படுகிறது. கற்றாழையை தலையில் தொடர்ந்து தேய்த்துவர அதிகபடியான முடிஉதிர்வை தடுத்து முடிக்கு புத்துணர்த்தி தருகிறது. கற்றாழை ஜெல்லை தலையில் பூசுவதன் மூலம் சேதமடைந்த மயிர்க்கால்களை சரிசெய்கிறது.
கற்றாழை ஜெல் இயற்கையாகவே குளிர்ச்சியான தன்மையை கொண்டது. அதனால் அதை தலையில் தடவும்போது வெப்பத்தை குறைத்து முடி உதிர்வதைத் தடுக்கிறது. பொடுகிற்கு கற்றாழை ஜெல் ஒரு இயற்கை தீர்வாகும். இது உச்சந்தலையை ஈரப்பதமாக்கி பொடுகை குறைக்கிறது.
கற்றாழை ஜெல் சருமத்தில் உள்ள வீக்கம் மற்றும் தடிப்புகளை குறைக்க உதவுகிறது. முகப்பரு குறைய சிறந்த மருந்தாக பயன்படுகிறது. இது வறண்ட சருமத்தை ஈரப்பதமாக்குவதற்கும் சிறப்பாக பயன்படுகிறது. உலர்ந்த உதடுகளை ஈரப்பதமாகவும் மென்மையானதாகவும் மாற்ற கற்றாழை ஜெல் பயன்படுகிறது.
கற்றாழையை தலையில் தேய்த்து வர தலையில் இரத்த ஓட்டம் அதிகரிக்கும். இதனால் முடி உதிர்வதையும் முடி உடைவதையும் தடுக்கும். மேலும் முடிக்கு நல்ல பளபளப்பும் தரும்.
கற்றாழை முடிக்கு சிறந்த இயற்கை கண்டிஷனராக
செயல்படுகிறது. இது வேர்களிலிருந்து முடியை வளர்த்து பலப்படுத்துகிறது. அதுமட்டுமல்லாமல்
அவற்றை மென்மையாகவும் பிரகாசமாகவும் வைத்திருக்கிறது. கற்றாழை ஈரப்பதமூட்டும் பண்புகளைக்
கொண்டுள்ளது. ஈரப்பதமூட்டும் பண்புகள் இருப்பதால், கற்றாழை துளைகளை இறுக்கவும், இறந்த
சரும செல்களை அகற்றவும் உதவுகிறது. கற்றாழை உச்சந்தலையில் தடவுவது பொடுகு குறைக்க உதவுகிறது.
கற்றாழை சாற்றை எப்போது வேண்டுமானாலும்
எடுத்துக் கொள்ளலாம். ஆனால் வெறும் வயிற்றில் எடுப்பது நல்லது அல்லது உணவிற்கு முன்பு
எடுப்பது நல்லது. சிறிய அளவில் வெறும் வயிற்றில் காலையில் குடித்து வர உடலுக்கு பெரும்
நன்மை பயக்கும். கற்றாழை சாறை குடிப்பதால்
உடலுக்கு ஊட்டச்சத்து கிடைக்கிறது.
உடலுக்கு ஊட்டச்சத்து கிடைப்பதால் முடியை உள்ளிலிருந்து ஆரோக்கியமானதாக உருவாக்குகிறது. அதனால் வலுவான ஆரோக்கியமான முடி கிடைக்கிறது.
முடிக்கு பயன்படுத்தும் முன் கவனிக்க
வேண்டிய முக்கியமான ஒன்று. கற்றாழை நல்லது என அனைவருக்கும் தெரியும். ஆனால் இதில் ஒரு
கேடு தரும் பொருளும் உள்ளது. எனவே கற்றாழையை நன்கு கழுவிய பின்னரே பயன்படுத்த வேண்டும்.
கற்றாழையில் இருக்கும் அந்த தீங்கான பொருள் குறித்த கூடுதல் தகவல்கள் மற்றும் கற்றாழையை
எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்பன குறித்த தகவல்களுக்கு Click here.
0 Comments