கற்றாழை என்பது ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக
பாரம்பரிய மருத்துவத்தில் பயன்படுத்தப்படும் ஒரு தாவரமாகும். முக்கியமாக இலைகள் மருத்துவதிற்கு பயன்படுத்தப்படுகின்றன. இலைகளில் மூன்று பாகங்கள்
உள்ளன. வெளிப்புற பச்சை பகுதி தோல். உட்புற பகுதி ஜெல் ஆகும், இது சாப்பிட பாதுகாப்பானது
மற்றும் மருத்துவ நோக்கங்களுக்காக பயன்படுத்தப்படுகிறது. அடுத்தது லேடெக்ஸ் ஆகும்,
இது தோல் மற்றும் ஜெல் இடையே இருக்கும் மஞ்சள் திரவமாகும். இது மலமிளக்கிய பண்புகளைக்
கொண்டுள்ளது மற்றும் லேடெக்ஸை அதிகமாக சாப்பிடுவது கடுமையான சிக்கல்களை ஏற்படுத்தும்.
ஆமாம், இது கற்றாழை செடியின் விஷம் என்றே
கூறவேண்டும். இதனை தொடர்ந்து உட்க்கொள்வதனால்
கடுமையான பாதிப்புகள் ஏற்படுகின்றன. அதுமட்டுமல்லாமல் இதனை சருமத்தில்
தடவுவதாலும் சருமத்தில் எரிச்சல், அரிப்பு
முதலியன ஏற்படலாம்.
லேடெக்ஸ் அதிகமாக சாப்பிடுவதால் வயிற்றுக்
கோளாறு , சிறுநீரக பிரச்சனைகள், ஒழுங்கற்ற இதயத் துடிப்பு மற்றும் தசை பலவீனம் ஏற்படலாம்.
சிறிய அளவுகளில் எடுத்து கொண்டால் அது மலச்சிக்கலுக்கு சிகிச்சையளிக்க உதவக்கூடும் என்கிறார்கள். இருப்பினும் அதை தவிர்ப்பது
நல்லது.
கர்ப்பிணிப் பெண்கள் லேடெக்ஸ் சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும். ஏனெனில்
அது கருச்சிதைவை ஏற்படுத்த கூடும்.
பயப்பட தேவை இல்லை. கற்றாழையில் ஏராளமான நன்மைகள்
உள்ளன. அதனை சரியான விதத்தில் பயன்படுத்தினால் நமக்கு ஏராளமான நன்மைகள் கிடைக்கும்.
கற்றாழையை எவ்வாறு சரியாக பயன்படுத்துவது என்பதை காண்போம்.
ஒரு கற்றாழை இலையை எடுத்து முதலில் விளிம்புகளில்
இருக்கும் முள் போன்ற அமைப்பை சீவிக்கொள்ளவும். அதன் பின் இரு பக்கங்களிலும் உள்ள தோலை
அகற்றவும். இந்த துண்டுகளை இப்படியே சாப்பிட
வேண்டாம். தோல் மற்றும் ஜெல் இடையே ஒரு மஞ்சள் திரவம் உள்ளது. இது லேடக்ஸ் என்று அழைக்கப்படுகிறது.
இது நம் உடலுக்கு ஆபத்தானது. கவலைப்பட வேண்டாம். கற்றாழை துண்டுகளை 6-7 முறை தண்ணீரில்
கழுவவும். பின்னர் சாப்பிடுவது பாதுகாப்பானது. கற்றாழை துண்டுகளை தண்ணீரில் 6-7 முறை
நன்கு கழுவிய பின் அதன் துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவேண்டும். இதில் ஒன்று அல்லது இரண்டு துண்டுகளை காலையில் வெறும்
வயிற்றில் சாப்பிட்டு வர உடல் சூடு குறையும்.
இதனை தொடர்ந்து உட்க்கொள்ளும்போது உடலின்
சக்கரை அளவு குறையும். மன அழுத்தம் குறையும். ஞாபக சக்தி அதிகரிக்கும். உடல் எடை குறையும்.
அதுமட்டுமல்லாமல் கற்றாழையை தொடர்ந்து உட்க்கொள்வதால் உடலுக்கு ஊட்டச்சத்து கிடைக்கிறது.
இதனால் உள்ளிலிருந்து முடி ஆரோக்கியமாக வளருகிறது மற்றும் தோலுக்கு நல்ல பளபளப்பு கிடைக்கிறது.
0 Comments