கற்றாழை பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னதாகவே நன் முன்னோர்கள் பயன்படுத்தும் மாமருந்து. உண்மையில்
கற்றாழையின் பயனை தெரிந்து கொண்டால் நீங்கள்
அதிக விலை கொடுத்து எந்த ஒரு தயாரிப்புகளையும்
வாங்க மாட்டீர்கள் .
கற்றாழை நம் வீட்டில் வளரும் சாதாரண
செடி வகை ஆகும். இதற்கு அதிகமான நீர் தேவை இல்லை. இதனை ஒரு சிறு தொட்டியிலேயே வளர்க்கலாம்.
இதனை பலர் வீட்டில் அழகு செடியாக வளர்க்கிறார்கள். இதன் மருத்துவ குணம் அறிந்து தற்போது பலரும் வீடுகளில்
வளர்க்க தொடக்கி உள்ளனர். கடையில் இதன் விலை
அதிகம் . வீட்டில் வளர்ப்பது தேவையற்ற செலவை மிச்சப்படுத்தும்.
கற்றாழையை குறித்து பல்வேறு ஆய்வுகள் நடத்தப்பட்டுள்ளன. அதிலிருந்து கற்றாழை உண்மையில் பல நன்மைகளை கொண்டுள்ளது என்பது கண்டறியப்பட்டுள்ளது. கற்றாழை பலவிதமான தோல் நோய்களுக்கு
மருந்துக்காக பயன்படுகிறது. வறண்ட சருமம், தோல் நோய்கள், முடி பிரச்சனைகள் ,பொடுகு முதலிய பல பிரச்சனைகளுக்கு
கற்றாழை பயன்படுகிறது . இது தோலில் ஏற்படும் சுருக்கங்களைக் குறைக்கிறது.
கற்றாழை முகப்பருவைக் குறைக்கிறது. கற்றாழை
சருமத்தில் பயன்படுத்துவதால் தோல் வயதான ஆரம்ப அறிகுறிகளைத் தடுக்கிறது. மேலும் இது
வெயிலினால் ஏற்படும் வெப்பத்தை குறைக்கும்.
இது சருமத்திற்கு ஒரு பாதுகாப்பு அடுக்காக செயல்படுகிறது. இது சருமத்திற்கு ஒரு நல்ல மாய்ஸ்சரைசராக செயல்படுகிறது. கற்றாழை
சருமத்தில் பயன்படுத்துவதால் புற ஊதா கதிர்வீச்சிலிருந்து
பாதுகாப்பு கிடைக்கிறது. கற்றாழை சருமத்தை மேம்படுத்தி சுருக்கங்களை தடுக்கும். இது
தோல் பளபளப்பை மேம்படுத்துகிறது.
கற்றாழை சருமத்தை ஈரப்பதமாக வைத்திருக்கிறது.
அதிகமாக எண்ணெய் சருமம் கொண்டவருக்கும் கற்றாழை சாறு பயன்படும். அழகு சாதான பொருட்கள்
பயன்படுத்தும் பெண்களுக்கு, தோல் வறளுவதை தடுக்க
கற்றாழை பயன்படுகிறது. கற்றாழையை தோலில் தேப்பதால் அது தோலில் உள்ள வறட்சியை
நீக்கி தோலுக்கு குளிர்ச்சி அளிக்கிறது. அதுமட்டுமல்லாமல் ஆண்களுக்கு ஷேவிங்கினால் ஏற்படும் சிறிய வெட்டுக்காயங்களுக்கு
கற்றாழை பயன்படுகிறது.
கற்றாழை முகப்பருவால் ஏற்படும் எரிச்சலை
குறைக்க பெரிதும் பயன்படுகிறது. கற்றாழை ஜெல்லை முகத்தில் தடவுவதால் முகப்பருவால் ஏற்படும் சிவப்பு தன்மை, வீக்கம்,
எரிச்சல் ஆகியவற்றை குறைத்து முகத்திற்கு குளிர்ச்சி தருகிறது.
கற்றாழையை முகத்தில் தேய்ப்பதின் மூலம்
பழைய தோல் நீங்கி புதிய பளபளப்பான தோல் கிடைக்கும். இதை நாம் வீட்டில் நேரம் கிடைக்கும்
பொது பயன்படுத்தலாம். அவ்வாறு பயன்படுத்தி வர தோல் மென்மையாகவும் பளபளப்பாகவும் மாறும்.
இதை முகத்தில் மட்டுமல்லாமல் கை, கால் உட்பட உடலின் அனைத்து பகுதிகளிலும் பயன்படுத்தலாம்.
கற்றாழை தோலின் மேலடுக்கில் ஒரு பாதுகாப்பாக
இருந்து தோலில் ஈரப்பதம் போகாமல் பாதுகாத்து தோலுக்கு புத்துணர்ச்சி ஊட்டி தோல் பிரச்சனைகளிலிருந்து
குணமாக்கிறது. அதுமட்டுமல்லாமல் வெயிலிலிருந்து சருமத்தை பாதுகாக்கிறது.
கற்றாழையை ஷேவிங் செய்யும்போது ஏற்படும் எரிச்சல் வெட்டுக்காயம்
முதலியவற்றிற்கு பயன்படுத்தலாம். இதனை ஷேவிங் செய்தபின் முகத்தில் தேய்க்க எரிச்சல்
குறையும். அதுமட்டுமல்லாமல் இதனை ஷேவிங் கிரீமாகவும் பயன்படுத்தலாம்.
கற்றாழை மற்றும் எலுமிச்சை சாறு கலந்து
முகத்தில் தேய்த்து சிறிது நேரம் உலரவிட்டு அதன் பின் குளிர்ந்த நீரால் கழுவி வர சூரியனால்
ஏற்படும் எரிச்சல் மற்றும் சிவப்பு தன்மை சரியாகும். கடையில் விற்கப்படும் கற்றாழை
ஜெல்லை பயன்படுத்துவதை விட வீட்டில் இயற்கையாக கிடைக்கும் ஜெல்லை பயன்படுத்துவது நல்லது.
நாம் கெமிக்கல் நிறைந்த அழகு சாதான பொருட்களை
பயன்டுத்துகிறோம். அவ்வாறு பயன்படுத்திய பின் முகத்தை நன்கு கழுவி விட்டு சிறிது கற்றாழை
ஜெல்லை முகத்தில் தேய்க்கலாம். இதனால் கெமிகலால் முகத்திற்கு ஏற்படும் ஆபத்து குறையும்.
சருமத்தைப் பராமரிப்பதில் இது மிகவும் கவனிக்கக்கூடிய செடியாகும்.
நீங்கள் அழகான, ஆரோக்கியமான சருமத்தைத் விரும்புகிறீர்களானால் அதற்கு கற்றாழை
ஜெல் ஒரு சிறந்த பொருளாகும். இது சருமத்தில்
இருக்கும் துளைகளை இறுக்க மற்றும் சருமத்தை மென்மையாக்க உதவுகிறது. கற்றாழை ஜெல் சருமத்தை
சுத்தப்படுத்துகிறது.
கற்றாழை ஜெல் பயன்படுத்தி பேஸ் மாஸ்க் செய்து பயன்படுத்தி வர முகத்தில் உள்ள சூரிய வெப்பத்தால் ஏற்படும் கருமையை அகற்றி, உங்கள் சருமத்தை புத்துணர்ச்சியுடன் வைக்கிறது. இலைகளிலிருந்து சாற்றை
எடுத்து நேரடியாக தோல் மீது தடவி வர முகப்பரு மற்றும் முகப்பரு வடுக்களுக்கு ஒரு நல்ல
தீர்வாக விளங்குகிறது.
கற்றாழை சாறு வைட்டமின்களால் நிறைந்தது.
நாம் சாறை குடிக்கும்போது, நம் உடலுக்கு வைட்டமின்கள் கிடைக்கும். இது நம் சருமத்தை பளபளப்பாக்குகிறது. நம் தோலில் எற்படும் வயதான அறிகுறிகளை
குறைக்கிறது.
கடையில் விற்கும் கற்றாழை ஜெல்லை உண்ண
பயன்படுத்த வேண்டாம். அது பல வேதிப்பொருட்களால் ஆனது. வெளிப்பூச்சுக்காக மட்டும் பயன்படுத்தலாம்.
இருப்பினும் இயற்கையாக கிடைக்கும் கற்றாழை ஜெல்லை பயன்படுத்துவது நல்லது.
முக்கியமாக கவனிக்க வேண்டியது என்னவென்றால்
கற்றாழையை அப்படியே உட்க்கொள்வதோ உடலில் தேய்ப்பதோ கூடாது. ஏனென்றால் கற்றாழையில் ஒரு
நச்சு பொருள் உள்ளது. எனவே கற்றாழையை நன்கு கழுவிய பின்னரே பயன்படுத்த வேண்டும். கற்றாழையில்
இருக்கும் நச்சு பொருள் பற்றியும் கற்றாழையை
எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்பது பற்றியும் தெரிந்து கொள்ள Click here.
0 Comments