சோற்று கற்றாழையின் பயன்கள் | Aloe Vera - Health Benefits, Uses and Side Effects in tamil | What is Aloe Vera in tamil


சோற்று கற்றாழையின்  பயன்கள் |  Aloe Vera - Health Benefits, Uses and Side Effects in tamil | What is Aloe Vera in tamil

கற்றாழை, ஒரு அற்புதமனான செடி வகை ஆகும். அதன்  மருத்துவ குணங்களை உணர்ந்து பல நூற்றாண்டுகளாக வீடுகளில் மக்கள் கற்றாழையை பயிரிடுகின்றனர். கற்றாழை செடி பெரும்பாலாக செடிகள் விற்கும் நர்சரி தோட்டங்களில் விற்கப்படுகின்றன. அதுமட்டுமல்லாமல் நாட்டுமருந்துக்கடைகளிலும் விற்கப்படுகின்றன. இதனை பலர் வீடுகளில் அழகு செடியாகவும் வளர்க்கிறார்கள். இதனை ஒரு பானையில் வைத்தாலே போதும் இந்த செடி நன்கு வளரும். கற்றாழை வளர அதிக தண்ணீர் தேவை இல்லை.

சோற்று கற்றாழையின்  பயன்கள் |  Aloe Vera - Health Benefits, Uses and Side Effects in tamil | What is Aloe Vera in tamil

கற்றாழை என்பது தண்டு இல்லாத  நீண்ட இலைகளை கொண்ட தாவரமாகும். இது 100 செ.மீ  உயரத்திற்கு வளரும். இதன் இலைகள் சற்று தடிமனாகவும், பச்சை நிறத்திலும் சதைப்பற்றுள்ளதாகவும் இருக்கும். இலையின்  விளிம்பு  முழுவதும் முட்கள் இருக்கும். கோடைகாலத்தில் கற்றாழை செடியில் பூக்கள் பூக்கின்றன. இது அனைத்து காலங்களிலும் நன்றாக வளரும். இதன் இலைகள் கூர்மையாக இருக்கும். கற்றாழை போன்ற கூர்மையான தாவரங்களை எப்போதும் நடை பாதையை விட்டு ஒதுக்கி வைத்து வளர்ப்பது நல்லது.

சோற்று கற்றாழையின்  பயன்கள் |  Aloe Vera - Health Benefits, Uses and Side Effects in tamil | What is Aloe Vera in tamil

பொதுவாக கற்றாழையின் சதைப்பற்று அதாவது கற்றாழை ஜெல்லே பயன்படுகிறது. கற்றாழை ஜெல் வைட்டமின்கள், தாதுக்கள், பாலிசாக்கரைடுகள், அமினோ அமிலங்கள், கொழுப்பு அமிலங்கள்  முதலிய சேர்மங்களால் ஆனது. கற்றாழை ஜெல் என்று  இங்கே கூறப்பட்டுள்ளது  இயற்கையான ஜெல் ஆகும். இந்த ஜெல்லில்  நிறைய நன்மைகள் உள்ளன. இயற்கையாக கற்றாழை செடியிலிருந்து கிடைக்கும் கற்றாழை சாறும் கடையில் விற்கும் கற்றாழை ஜெல்லும் ஒன்று அல்ல. கடையில் கிடைக்கும் ஜெல்லை உண்ண பயன்படுத்தவேண்டாம். அதில் பாதுகாப்பற்ற பல வேதிப்பொருட்கள் உள்ளன. கடையில் விற்கும் கற்றாழை ஜெல் தோலில் போடுவதற்காக உருவாக்கப்பட்டவை. தோலில் மட்டும் அந்த ஜெல்லைப் பயன்படுத்தலாம். வீட்டில் வளர்க்கப்படும் இலையின் உட்புறத்திலிருந்து ஜெல்லை எடுத்து அந்த இயற்கையான ஜெல்லை பயன்படுவதுதான் மிகவும் சிறந்தது.


கற்றாழை  ஜூஸ் கோடைகாலத்தில் உடலுக்கு குளிர்ச்சி தரக்கூடிய ஒரு சிறந்த பானம். அதுமட்டுமல்லாமல் வெயிலினால் சருமத்திற்கு ஏற்படும் பிரச்னையை குணப்படுத்தவும் சிறப்பாக பயன்படுகிறது. இது பல நன்மைகளையும் பயன்பாடுகளையும் கொண்டுள்ளது.

சோற்று கற்றாழையின்  பயன்கள் |  Aloe Vera - Health Benefits, Uses and Side Effects in tamil | What is Aloe Vera in tamil


கற்றாழையில் பல மருத்துவ குணங்கள் உள்ளன. இது அழகுசாதனப் பொருட்கள், ஷாம்புகள் முதலியன தயாரிக்க பயன்படுகின்றன. கற்றாழை ஜெல் முகப்பருவை எதிர்த்துப் போராடுவதற்கும், உடலில் உள்ள  நச்சுத்தன்மையை அகற்றுவதற்கும், செரிமானத்தை ஊக்குவிப்பதற்கும் பயன்படுகிறது.

கற்றாழை இலைகளுக்குள் இருக்கும் ஜெல் அதிக அளவில் மருந்தாக பயன்படுகிறது. கற்றாழை ஜெல் முகப்பருவுக்கு சிறந்த மருந்தாகும். கற்றாழை ஜெல் முகப்பருவால் பாதிப்புக்குள்ளான சருமத்திற்கு நல்ல மாய்ஸ்சரைசர் மற்றும் ஹைட்ரேட்டராக செயல்படுகிறது. சருமத்தில் இருக்கும் துளைகளை இறுக்க மற்றும் சருமத்தை மென்மையாக்க உதவுகிறது. சூரிய வெப்பத்தால் ஏற்படும் கருமையை  அகற்றி, உங்கள் சருமத்தை புத்துணர்ச்சியுடன் வைக்கிறது. இது வெயிலில் ஏற்படும் எரிச்சலை குறைக்க மிகவும் பயன்படுகிறது. இதன் இலையிலிருந்து கிடைக்கும் ஜெல்லை வெயிலினால் சிவந்த இடங்களில் தேய்க்க எரிச்சல் நீங்கி உடலுக்கு குளிர்ச்சி தரும். புற ஊதா கதிர்வீச்சிலிருந்து பாதுகாக்கிறது.


 தோல் நோய், முடி உதிர்தல் மற்றும்  பல நோய்களுக்கு கற்றாழை ஒரு இயற்கை தீர்வாகும். கற்றாழை முடி வளர்ச்சியைத் தூண்டகிறது. கூடுதல் முடி வளர உதவுகிறது. முடி மெலிதல் மற்றும் வழுக்கையை  குறைக்கிறது. போடுகிற்கு இது சிறந்த மருந்தாக பயன்படுகிறது.

சோற்று கற்றாழையின்  பயன்கள் |  Aloe Vera - Health Benefits, Uses and Side Effects in tamil | What is Aloe Vera in tamil


கற்றாழை சாறு எரிச்சல் எதிர்ப்பு பண்புகளை கொண்டுள்ளது. இது உடலில் உள்ள வீக்கத்தைக் குறைக்க உதவும். கற்றாழை அதிகபடியான புண்களை சரி செய்யாது. ஆனால் சிறு எரிச்சல்களை சரி செய்ய உதவும். இதன் இலையை உடைத்து அதில் இருக்கும் ஜெல்லை எரிச்சல் உள்ள இடத்தில் தடவி வர எரிச்சல் குறையும். மூட்டு மற்றும் தசை வலிகளுக்கு சிகிச்சையளிக்க இது பயன்படுகிறது. முதல் மற்றும் இரண்டாம் நிலை தீக்காயங்களுக்கு சிறந்த மருந்தாக கற்றாழை பயன்படுகிறது.

கற்றாழை பல  அழகு சாதன  நிறுவனங்களில் அழகு சாதன பொருட்கள் செய்ய  பயன்படுத்தப்படுகிறது. இந்த இயற்கையான பொருள்  சருமத்தை  மேம்படுத்தவும், பல தோல் பிரச்சினைகளை சரி செய்யவும் பயன்படுத்தப்படுகிறது. இது நோய்களை உண்டாக்கும் சில வகையான கிருமிகளை அழிக்க பயன்படுகிறது. சருமத்தில் கற்றாழை ஜெல்லை தொடர்ந்து  தேய்த்து வந்தால் உடலில் உள்ள  தழும்புகள் குறையும். கற்றாழை சாறு உட்கொள்வதால்  உடலுக்கு  ஊட்டச்சத்துக்கள் கிடைக்கிறது. அது உடலின் உள்ளே இருந்து அழகை உருவாக்குகிறது. உடலுக்கு  தேவையான ஊட்டச்சத்துக்கள் கிடைக்கும் போதுஉடல் வயதான செயல்முறைகளை எதிர்த்துப் போராடுகிறது. தோலை பளபளப்பாகிறது.


கற்றாழை ஜெல்லை வாயில் தடவினால் பல் வலி குறையும். கற்றாழை சாற்றை வாய் கழுவ தொடர்ந்து பயன்படுத்துவதால் வாயில் உள்ள பாக்டீரியா குறையும். கற்றாழையில்  எரிச்சலை குறைக்கும் தன்மை உள்ளதால், இது வயிற்றில் ஏற்படும் வீக்கத்தைக் குறைக்கும்.

சோற்று கற்றாழையின்  பயன்கள் |  Aloe Vera - Health Benefits, Uses and Side Effects in tamil | What is Aloe Vera in tamil


கற்றாழையில் அமினோ அமிலங்கள், வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் நிறைந்து  இருக்கிறது. செரிமான பிரச்சினைகள் உள்ளவர்களுக்கு இது சிறந்த மருந்தாக பயன்படுகிறது. சருமத்தைப் போலவே, கற்றாழை வயிறு மற்றும் குடலுக்கு ஏற்படும் சேதத்தை சரிசெய்ய உதவுகிறது. இது செரிமானத்தை வலுப்படுத்தவும்உடலில் உள்ள கழிவுகளை  அகற்றவும் உதவும். வெறும் வயிற்றில் கற்றாழையை சாப்பிடுவதால் உடலில் இருந்து நச்சுகளை வெளியேற்றும். இது செரிமானம், மலச்சிக்கல் மற்றும் அமிலத்தன்மை போன்ற செரிமான கோளாறுகளை குணப்படுத்தும். இது செரிமான அமைப்பை சுத்தப்படுத்துகிறது மற்றும் குடல்களை சுத்தம் செய்கிறது. கற்றாழையை தொடர்ந்து சாப்பிடுவதால் வயிற்றுப் புண்ணை குணப்படுத்துகிறது. வயிற்றிக்கு குளிர்ச்சி தன்மையை தருகிறது. கற்றாழை செரிமானத்திற்கு திறம்பட செயல்படுகிறது. கற்றாழை ஒரு மலமிளக்கியாக செயல்படுகிறது. இதனால் கற்றாழை கடுமையான மலச்சிக்கல் பிரச்சினையால் பாதிக்கப்படுபவர்களுக்கு சிறந்த தீர்வளிக்கிறது. கற்றாழை சாறு குடிப்பதால்  செரிமான பாதையில் ஏற்படும் வீக்கத்தைக் குறைக்கிறது 

கற்றாழை சாறை உட்க்கொள்வதால் இரத்த அழுத்தம் கட்டுப்படுகிறது. இரத்தத்தை  சுத்திகரிக்கிறது. இரத்த ஓட்டம் மற்றும் ஆக்ஸிஜனேற்றத்தை மேம்படுத்துகிறது. கொழுப்பைக் குறைக்கிறது. இரத்தத்தின் ஒட்டும் தன்மையை குறைக்கிறது. இதனால் இதய நோய்களின் அபாயத்தைக் குறைக்க கற்றாழை முக்கியமாக  உதவுகிறது. நம் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.


கற்றாழையை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் இரத்தத்தில் உள்ள  சர்க்கரை அளவு குறையும். கற்றாழையை  நீரிழிவு மருந்தோடு சேர்த்து எடுத்துக்கொள்வது ஆபத்தானது, ஏனெனில் கற்றாழை இரத்தத்தில் உள்ள குளுக்கோஸ் அளவைக் குறைக்கலாம்.

சோற்று கற்றாழையின்  பயன்கள் |  Aloe Vera - Health Benefits, Uses and Side Effects in tamil | What is Aloe Vera in tamil


நாம் அனைவரும் ஒல்லியாக இருக்க விரும்புகிறோம். அதற்கான வழிகளை தேடுகிறோம். கற்றாழையை தொடர்ந்து பயன்படுத்துவதால் உடலில் இருக்கும் கழுவுகள் வெளியேறுகின்றது. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. இது அதிகப்படியான கொழுப்பைக் குறைக்கிறது. அதனால்  உடலில் நச்சு தன்மை குறைந்து எடை எளிதில் குறைகிறது. உடலுக்கு ஆரோக்கியத்தை தருகிறது.

கற்றாழை உடலுக்கு ஒரு குளிர்ச்சி தரக்கூடிய பொருளாக இருப்பதினால்  மனச்சோர்வைக் குறைத்து ஞாபகசக்தியை வளர செய்கிறது.

கற்றாழையின் பக்க விளைவுகள்:

  • கற்றாழை என்பது அனைவருக்கும் ஏற்றது  இல்லை. புற்றுநோய் மருந்துகளை உட்கொள்ளும் எவரும் கற்றாழை சாற்றைப் பயன்படுத்த வேண்டாம்.

  • கற்றாழை நீரிழிவு மருந்தோடு எடுத்துக்கொள்ள வேண்டாம். ஏனெனில் கற்றாழை இரத்தத்தில் குளுக்கோஸ் அளவைக் குறைக்கிறது. எனவே சர்க்கரை நோயாளிகள் நீரிழிவு மருந்தோடு சேர்த்து கற்றாழையை எடுத்துக்கொள்வது ஆபத்தானது.

  • கர்ப்பிணி பெண்கள் இந்த சாற்றை குடிப்பதை  தவிர்க்க வேண்டும். ஏனெனில் இது கருச்சிதைவை ஏற்படுத்தக்கூடும்.

  • லேடெக்ஸ் அதிகமாக சாப்பிடுவதால் வயிற்றுக் கோளாறு , சிறுநீரக பிரச்சினைகள், முதலிய பல பிரச்சனைகள் ஏற்படலாம். எனவே  அதை தவிர்ப்பது நல்லது.

  • சிலருக்கு கற்றாழை ஜெல் ஒவ்வாமை ஏற்படுத்தலாம். அதாவது தோல் ஒவ்வாமை, தோல் வெடிப்பு, கண்களில் சிவத்தல், எரிச்சல் மற்றும் எரியும் உணர்வை ஏற்படுத்தலாம். அவ்வாறு ஏதேனும் அறிகுறிகள் தென்பட்டால் கற்றாழையை பயன்படுத்த வேண்டாம்.

  • கற்றாழையை சரியான அளவில் சாப்பிடுவது நல்லது. அதிக அளவில்  சாப்பிடுவது  உடலில் நீரிழப்பை ஏற்படுத்தக்கூடும். இயற்கையான பொருளாக இருந்தாலும் அளவோடு சாப்பிடுவது நல்லது.


Post a Comment

0 Comments