கற்றாழை சதைப்பற்றுள்ள ஒரு மருந்து செடி.
இது நம் உடலுக்கு உச்சி முதல் உள்ளங்கால் வரை
பல நலன்களை தருகிறது. இதன் ஜெல்லே பெருதும் பயன்படுகிறது. கற்றாழையை எவ்வாறெல்லாம்
பயன்படுத்தலாம் என்பதை காண்போம்.
1.கற்றாழை சாறுடன் ஒரு சிட்டிகை மஞ்சள் தூள், ஒரு டீஸ்பூன் தேன், ஒரு
டீஸ்பூன் பால் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும். இந்த கலவையை பேஸ் மாஸ்க் போல முகத்தில் தடவி கொள்ளவும். 30 நிமிடங்கள் களித்து
அதனை நீரால் கழுவவும். இவ்வாறு தொடர்ந்து செய்து வர தோல் வறட்சி நீங்கி தோல் பளபளப்பாகும்.
2.நாம் சுட்டெரிக்கும் வெயிலில் வெளியே
செல்கிறோம். அவ்வாறு செல்வதால் சூரிய கதிர்களால் தோல் சிவந்து போதல் மற்றும் எரிச்சல்
முதலியன ஏற்படலாம். அதற்கு கற்றாழை ஒரு சிறந்த தீர்வு. வெளியே சென்று வந்தபின் முகத்தை
நன்கு கழுவி கொள்ள வேண்டும். அதன் பின் சிறிது கற்றாழை சறை எடுத்து முகத்தில் தடவி
கொள்ளவேண்டும். சிறிது நேரம் களித்து வேண்டுமென்றால் கழுவி கொள்ளலாம். இவ்வாறு செய்து
வர சூரியக்கதிர்களால் ஏற்படும் பிரச்சனைகள்
நீங்கும்.
3.கற்றாழை சாறுடன் சிறிது கடலை மாவு
மற்றும் எலுமிச்சைசாறு சேர்த்து கலந்து பேஸ் மாஸ்க் போல முகத்தில் தடவி கொள்ளவும். 30 நிமிடங்கள் அல்லது
நன்கு காய்ந்த பிறகு அதனை நீரால் கழுவவும். இவ்வாறு செய்து வர முகத்தில் உள்ள கருமை
நீங்கி முகம் வெண்மையாகும்.
4.ஒரு பாத்திரத்தில் எலுமிச்சை சாறு
மற்றும் சிறிது சக்கரையை எடுத்து கொள்ளவும். ஒரு கற்றாழை துண்டை எடுத்து எலுமிச்சை
மற்றும் சக்கரை கலவையில் தொட்டு முகத்தில் ஸ்க்ரப் செய்யவேண்டும். அவ்வாறு செய்வதால்
தோலில் உள்ள இறந்த செல்கள் நீங்கி புது பளபளக்கும் தோல் கிடைக்கும்.
5.நன்கு முகத்தை நீரால் கழுவி கொள்ள
வேண்டும். அதன் பின் கற்றாழை சாறை எடுத்து முகத்தில் தேய்து கொள்ள வேண்டும். இரவு முழுவதும்
அப்படியே விட்டுவிடலாம். காலையில் முகத்தை குளிர்ந்த நீரால் கழுவி கொள்ளவும். இவ்வாறு
செய்து வர முகம் பளபளப்பாகும்.
6.பல வேதிபொருட்களாலான பொருட்களை முகத்தை
அழகுபடுத்த பயன்படுத்துகிறோம். அந்த ஒப்பனை பொருட்களை நீக்கிய பின் கற்றாழையை கொண்டு
மசாஜ் செய்து வர வேதிபொருட்களால் ஏற்படும் பாதிப்பு குறையும்.
7.கற்றாழை சாறை ஐஸ் ட்ரேக்களில் ஊற்றி
உறைய வைத்து அந்த ஐஸ் கட்டிகளை கொண்டு முகத்தில் மசாஜ் செய்து வர முகத்தில் உள்ள துளைகள்
சுருங்கும். முகம் மென்மையாகும்.
8.வறண்ட மற்றும் வெடிப்புள்ள காலால்
துன்பப்படுகிறீர்களா, அப்படியென்றால் இதை செய்யுங்கள். கற்றாழை சாறை எடுத்து கால் பாதங்களில்
தேய்த்து வர வெடிப்பு குறையும். கால் வறட்சி நீங்கும். காலுக்கு குளிர்ச்சி தரும்.
9.கற்றாழை சாறுடன் தேங்காய் எண்ணெய்
சேர்த்து கலந்து தலையில் தேய்த்து கொள்ளவேண்டும். 20 நிமிடங்கள் கழித்து கழுவிக்கொள்ளலாம்.
இவ்வாறு செய்து வர முடி பளபளப்பாகவும் ஆரோக்கியமாகவும் இருக்கும். முடி உதிர்வதையும்
உடைவதையும் குறைக்கும்.
10.கற்றாழையை ஷாம்புவாகவும் பயன்படுத்தலாம்.
சிறிது கற்றாழை சாறை எடுத்து தலையில் நன்கு தேய்த்து கொள்ள வேண்டும். சிறிது நேரம்
களித்து குளிக்கலாம். அவ்வாறு செய்வதால் முடி பளபளப்பாகவும் ஆரோக்கியமாகவும் இருக்கும்.
11.கற்றாழையை எலுமிச்சை சாறுடன் சேர்த்து
தலையில் தேய்த்து சிறிது நேரம் கழித்து குளித்து வர பொடுகு பிரச்சனை குறையும்.
12.கற்றாழை சாற்றை உதட்டில் தடவி வர
வெடிப்பு முதலியன நீங்கி உதடு மென்மையாகும்.
13.கற்றாழை சாறு அல்லது கற்றாழை ஒன்று இரண்டு துண்டுகளை வெறும் வயிற்றில் தவறாமல் உட்கொள்வது உடலுக்கு ஊட்டச்சத்துக்களை அளிக்கிறது.
எனவே இது முடி ஆரோக்கியமாக வளர உதவுகிறது மற்றும் சருமத்தை பளபளபாக்க உதவுகிறது.
14. கற்றாழை சாறுடன் எலுமிச்சை சாறு மற்றும்
தேன் ஆகியவற்றை சேர்த்து வெறும் வயிற்றில் தவறாமல் எடுத்துக்கொள்வது எடை குறைக்க உதவுகிறது.
15. கற்றாழை துண்டுகளை சாப்பிடுவதால் அல்லது கற்றாழை சாற்றை வெறும் வயிற்றில் குடிப்பதால் இரத்தத்தில் சர்க்கரை அளவு குறைகிறது. மேலும் கொழுப்பும் குறைகிறது.
கற்றாழையை செடியிலிருந்து அப்படியே எடுத்து பயன்படுத்த கூடாது.
ஏனெனில் அதில் ஒரு நச்சு பொருள் உள்ளது. எனவே நன்கு கழுவி பயன்படுத்த வேண்டும். கற்றாழையில்
உள்ள நச்சுப்பொருள் குறித்து தெரிந்து கொள்ள Click here.
0 Comments